kamalhaasan comedy twitter

நடிகை தீபிகா படுகோன் நடித்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் மகாராணி பத்மாவதியை தவறாக சித்திரித்து இயக்குனர் படம் இயக்கியுள்ளதாகக் கூறி இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

குஜராத், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் ஒரு சில அமைப்புகள் நடிகை தீபிகா படுகோன் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.5 கோடி கொடுக்கப்படும் என விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சில அரசியல்வாதிகளும் இந்தப் படத்திற்கு வெளியிடும் அனுமதி மறுக்க வேண்டும் எனக் கூறி அரசியல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை திடீர் என இரவு நேரத்தில் தெரிவித்திருந்தார். அதில் தீபிகாவின் தலை வேண்டும்... அவருடைய உடலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்... எனத் தெரிவித்துள்ளார்.

பலர் ஏன் கமலஹாசன் இது போன்ற கருத்தை வெளியிட்டார் என குழம்பிக்கொண்டு இருந்த நிலையில் பின்தான் தெரிந்தது இதில் நடிகை தீபிகாவின் தலை காக்கப் பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் என்றும் மேலும் தன்னுடைய படங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் வந்துள்ளது... அதே போல் இந்த படத்திற்கு தடைகள் வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார் என்று புரிந்து கொண்டனர். 

தீபிகாவின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்றும், இது சிந்திக்க வேண்டிய நேரமிது என்றும் நிறைய சொல்லியாகிவிட்டது, கேட்டுக்கொள் பாரத மாதாவே என குறிப்பிட்டுள்ளார் என பின்னர்தான் பலருக்கும் புரிந்தது. இரவு 10.35க்கு திடீரென ஐ வாண்ட் தீபிகா ஹெட் என்று கமல் போட்ட டிவிட்டால் பலரும் தலையைப் பிய்த்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரித்து மேய்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

கமலின் காமெடி ட்விட் இதோ ..

Scroll to load tweet…