நடிப்பில் கூட வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கமலஹாசன். தன்னுடைய அதே கருத்தை தற்போது இவர் துவங்கி இருக்கும் 'மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியிலும் புகுத்தி வருகிறார். 

இதுவரை இருந்த அரசியலை விட தன்னுடைய அரசியல் வித்தியாசமானதாகவும், மக்களுடைய அரசாக இருக்கும் என்று கூறி வருகிறார். இவருடைய கருத்துக்கள் நாளுக்கு நாள் பலரை சென்றடைவதாகவும் இதனால் ஈர்க்கப் பட்டு பலர் இவருடைய கட்சியில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனராம். 

மேலும் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் இவருடைய கட்சியின் சார்பாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த கமல் திட்டமிட்டுள்ளார். 

இன்று பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவர்கள் கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அப்போது மாணவர் ஒருவர் நீங்கள் முதல்வராக ஆனால் உங்களின் முதல் கை எழுந்து எதற்காக இருக்கும் என கேட்டுள்ளார். 

இதற்கு கமலஹாசன் 'நான் தமிழக முதல்வரானால் என்னுடைய முதல் கைஎழுந்து லோக் ஆயுக்தாவகதான் இருக்கும்' என்று பதில் கொடுத்துள்ளார். ஏற்க்கனவே ஒரு ஒருசில அரசியல்வாதிகள் இதே வாக்குறுதியை கொடுத்தனர் என்பதும் ஆனால் அந்த அரசியல்வாதிகள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.