kamal twitter
நடிகர் கமல்ஹாசன் புகைப்படத்தை சிறுவன் ஆவேசமாக கத்தியால் குத்திக் கிழிக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்து தீவிரவாதம் குழந்களின் கைகளில் கத்தியைத் திணிக்கிறது என டுவிட்டரில் கமெண்ட் அடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்நிலையில் சிறுவன் ஒருவன் நடிகர் கமலஹாசனின் படத்தை கத்தியால் குத்திக் கிழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது டீவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கமல், இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
Kamal Haasan
என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நெட்டிசன்கள் வழக்கம் போல கமலின் டுவீட் புரியாமல் காலும் புலம்பத்தொடங்கிவிட்டனர். ஆனாலும் ஏற்கெனவே, இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என்று கமல் தெரிவித்ததை அவரது ஆதரவாளர்கள் நினைவூட்டி டுவிட்டர் பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன.
