kamal talk julie stop the narathar work
கமல் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதுமே எதையும் பற்றி பேசாமல், அகம் டிவி வழியே உள்ளே செல்வோம் என்று கூறி, இன்று இந்த வீட்டை விட்டு யார் வெளியே போனால் மிகவும் மிஸ் பண்ணுவீர்கள் என நடிகை சுஜா வருணியிடம் கேட்கிறார்.
அதற்கு சுஜா ஆரவை நான் தம்பி என்று அழைக்கிறேன், அதே போல காஜலும் நன்றாக பழகி வருகிறார், சினேகன் தான் தினமும் தனக்கு காபி போட்டு கொடுக்கிறார் அதனால் மூன்று பேரையும் ஒன்றாகத்தான் பார்ப்பதாக கூறுகிறார்.
இதை தொடர்ந்து, ஹரீஷிடம் இதே கேள்வியை எழுப்ப அவர் நான் சினேகன் மற்றும் ஆரவ் இருவரிடமும் மிகவும் நெருக்கமாக பழகிவிட்டேன், அதனால் இவர்கள் போனால் அதிகம் மிஸ் பண்ணுவேன் காஜல் போனால் கொஞ்சம் குறைவாக மிஸ் பண்ணுவேன் என்று கூறுகிறார்.
இதே கேள்வி ஜூலியிடம் வர அவர் மூன்று பேரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன், அதனால் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்பது போல் கூறுகிறார், உடனே கமல் போதும் நாரதர் வேலை என, ஜூலியின் மூக்கை உடைத்து போல் கூறுகிறார். கமல் இப்படி கூறியதும் பலர் சந்தோஷமாக கைதட்டுவதை கண்டு ஜூலி மிகவும் சோகமாகிறார் இதை பார்த்ததும் நான் நாரதர் என்று சொன்னது உங்களை இல்லை என்னை. நான் தான் இவரை பிடிக்குமா பிடிக்காதா என்பது போல் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது நான் தான் என கமல் கூறுகிறார்.
பின் ஜூலியிடமும் தெளிவாக நான் என்னைத்தான் நாரதர் என்று கூறிக்கொண்டேன் உங்களை இல்லை சோகமாக இருக்காதீர்கள் என கூறியதும் ஜூலி சிரித்தார்.
