வாய்மையே வெல்லும் என்கிற பழமொழி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத்தான் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. 

ஜூலி கீழே விழுந்து அழுத்துக்கொண்டிருந்தபோது ஓவியா, ஆறுதல் சொல்லும்போது தன்னை வேண்டும் என்றே உசுப்பி விட்டு மற்றவர்களை தவறாக நினைக்க வைத்து விட்டார் என்று ஜூலி ஓவியா மேல் பழி போட்டது ரசிகர்களுக்கு தெரிந்தாலும், உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கு தெரியாது.

இதனால் பொய் சொல்லி, அழுது புலம்பி ஓவியாவை கெட்டவளாக்கி தன்னை நல்லவள் என்று நிலைநிறுத்திக்கொண்டார் ஜூலி. 

இருவரிடத்திலும் நன்கு விசாரித்தபின், ரூமில் ஓவியாவிற்கும், ஜூலிக்கும் நடந்த பேச்சை கமல் ஒரு குறும்படமாக போட்டு காண்பித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காது ஜூலி ஒரு நிமிடம் மிரண்டே போய்விட்டார். ஓவியா குறும்படம் முடியும் வரை சிரித்து ஆரவாரம் செய்து மிகவும் சந்தோஷமாக இருந்தார்.

இந்த குறும்படத்தை பார்த்த அனைவரும், ஜூலி பொய் சொல்கிறார் என ஒற்றுக்கொண்டாலும் ஜூலி மட்டும் இதனை ஒற்றுக்கொள்ளவில்லை, தண்னிடம் "அதை கேட்டியா" என்கிற வார்த்தையை உபயோகித்தார் என கூறினார்.

இதற்கு கமல் அவர் உங்களை குழப்பி விட வில்லை என்பது தெளிவாக தெரிகிறது... மீண்டும் அப்படி உங்களுக்கு தோன்றினால் அதற்கு மனநலம் தெளிவு இல்லாதவர் என்று பொருள் என மிகவும் சாதாரணமாக கூறி ஜூலியை ஒரு வழியாக அழவைத்து விட்டார்.