பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றையதினம் ஒரு குறும்படம் அனைவருக்கும் போட்டு காண்பிக்கப்பட்டது, அதில் ஜூலிதான் காயத்ரி, நமிதா என அனைவரும் தன்னை நடிப்பதாக கூறி அழுவாரே தவிர, ஓவியா ஜூலிக்கு சமாதானம் மட்டுமே சொல்லுவார்.

இந்நிலையில் குறும்படம் போட்டு நிரூபித்தும் கூட, ஜூலி கமலஹாசனிடம் தன் மீது எந்த ஒரு தவறும் இல்லை என மீண்டும் நடிப்பார். ஜூலி மேல் தான் அனைத்து தவறும் உள்ளது என அனைத்து போட்டியாளர்களும் ஒற்றுக்கொண்டாலும் ஜூலி இதனை ஏற்க மாட்டார்.

ஜூலி கமலிடம் பேசும் போது, ஜூலியின் நடிப்பை பார்த்து சில நிமிடம் வியர்த்து போய் நெஞ்சில் கை வைத்து ஜூலியின் கதையை மிகவும் நக்கலாக கேட்பார். பொய்யை நிரூபிக்க பல முறை போராடியும் ஜூலிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.