’குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றதுல காட்டுற மும்முரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்றதுல இல்லையே. ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் பொள்ளாச்சி பாலியல் பயங்கர விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமாக இருப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் 4 நிமிடங்கள் 22 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 அந்த வீடியோவில்  ஆளும் கட்சியினர் மீதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் பேசிய அவர் ,’’அந்த பெண் அலறிய குரலை நினைத்துப் பார்க்கும்போது மனம் பதறுகிறது,பயம், தவிப்பு கலந்த அந்த பெண்ணின் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.வழக்கை விசாரிக்கும் எஸ்.பி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிவிட்டாரா? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? 

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அவமானதை எப்படி துடைக்கப்போறீங்க சாமி? இன்னும் ஏன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஜெயலலிதா என்ற பெண்மணியின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் நீங்கள் பெண்களுக்கு எப்போது பாதுகாப்பு தரப்போகிறீர்கள்?’குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றதுல காட்டுற மும்முரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்றதுல இல்லையே. ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் பொள்ளாச்சி பாலியல் பயங்கர விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமாக இருப்பதா?

உங்க அம்மாவின் புகைப்படத்தை சட்டைப்பாக்கெட்டுக்குள் வைத்திருந்தால் மட்டும் போதுமா? இந்தக் கேள்விகளை எல்லாம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகக் கேட்கவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பன் என்கிற முறையில் கேட்கிறேன், உங்க ‘அம்மாவுக்கே’ ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படித் துடைக்கப்போறீங்க மிஸ்டர் சி.எம்? இதுவரைக்கும் எதுவுமே செய்யாம எதுக்காகக் காத்திருக்கீங்க. எலெக்‌ஷன் முடியட்டும்னு காத்திருக்கீங்களா? என்று விளாசித்தள்ளியிருக்கிறார் கமல்.