பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஜூலி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் தங்க போட்டியாளர்களாக இல்லாமல், விருந்தினர்களாக வருகை தந்தனர். ஆனால் இவர்களும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்கை செய்யவேண்டும் போட்டியாளர்கள் பின்பற்றும் அனைத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது விதி.

இவர்கள் உள்ளே சென்றபோது, வெளியில் என்ன நடந்தது என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஆனால் ஜூலியும், ஆர்த்தியும் வெளியில் தங்களுக்கு என்ன நேர்ந்தது, என்பதை அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையிலும் தெரிவித்தனர். இதனால் ஜூலி மற்றும் ஆர்த்தியை உள்ளே அழைத்து, உங்களிடம் எதை சொல்லக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதனை வெளியில் சொல்லிவிட்டீர்கள். 

அதற்கு உங்களுக்கு தண்டனை கொடுக்க கொண்டும் என்று கூறினார். மேலும் இதற்கு தண்டனையாக இருவரும் பிக் பாஸ் வீட்டிலேயே இருக்கவேண்டும் என கூறி. இன்று வெளியேற்றப்படும் நபரோடு நீங்களும் வெளியே செல்வதுபோல் சென்று மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட வேண்டும் என்கிற ஓர் ட்விஸ்ட்டையும் வைத்தார் கமல்.