நடிகர் கமல்ஹாசன் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு குணம் அடைந்தும், நடிகை கெளதமி பிரிவின் துயரத்தில் இருந்தும் மெல்ல மெல்ல மீண்டுவந்து கொண்டிருக்கிறார்.
இன்னும் சில நாட்களில் அவர் நடித்து வரும் சபாஷ் நாய்டு படத்தில் அடுத்தகட்ட படபிடிபையும் தொடங்க உள்ளார்.
இந்தநிலையில் இப்போது நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அதே போல அண்மையில் இவர் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் வரக்காரணமே மிஸ்டர் சிவாஜி கணேசன் தான் என கூறியுள்ளார்.
அதற்கு காரணம் கூறிய கமல்ஹாசன் அவர் புகைப்பிடிக்கும் ஸ்டைலை பார்த்தாலே அழகாக இருக்கும். நாமும் புகைப்பிடிக்க வேண்டும் போல் இருக்கும் என்று அசத்தலான பதில் கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST