உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து அவர் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் மெளலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இந்த செய்தியில் சிறிதும் உண்மையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசனை மெளலி சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் இந்த சந்திப்பு நட்புரீதியானது தான் என்றும்.

இந்த சந்திப்பில் இருவரும் இணைந்து திரைப்படம் எடுப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் கமல்ஹாசன் தற்போது முழு அளவில் குணமடைந்து விட்டதால் வரும் டிசம்பர் 15 முதல் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். 

இந்த படம் முடிந்த பின்னரே அவர் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.