kamal join the policital
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அரசியல் சூழ் நிலைகள் குறித்து அவ்வப்போது உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கருத்துகளையும் தெரிவித்து வந்தார்.
இப்படி கமலால் கூறப்பட்ட ஆக்கபூர்வமான கருத்துக்கள் அரசியல்வாதிகளை ஆத்திரமூட்டியுள்ளதால் அவர் மீது சிலர் வழக்கு தொடுத்துள்ளனர் என்பது தெரிந்ததே.
மேலும் கடந்த சில நாட்களாகவே கமல்ஹாசனை பிரபல அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற கமல்ஹாசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் டெல்லி அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தில், 'சற்றுமுன் மரியாதை நிமித்தமாக என்னை புதுடெல்லியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சந்தித்தார்' என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தற்போது வரை எந்த கட்சியிலும் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் உள்ள சந்திப்பாக கருதப்படுகிறது. மேலும் விரைவில் கமலஹாசன் பிரபல கட்சி ஒன்றில் சேரலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
