உலக நாயகன் கமல் நடிப்பில்1996ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய சாதனை படைத்த படம் தான் இந்தியன். இந்த படத்தின் இயக்குனர் சங்கர் கைவண்ணத்தில் இந்தியன் பிரமாண்டமாக திரைக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  24ஆண்டுகள் கழித்து, இந்தியன்2 படத்தினை ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் நடிகர் கமல் ஈடுபட்டிருக்கிறார். 

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 உலக நாயகன் கமல் நடிப்பில்1996ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய சாதனை படைத்த படம் தான் இந்தியன். இந்த படத்தின் இயக்குனர் சங்கர் கைவண்ணத்தில் இந்தியன் பிரமாண்டமாக திரைக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 24ஆண்டுகள் கழித்து, இந்தியன்2 படத்தினை ரசிகர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் நடிகர் கமல் ஈடுபட்டிருக்கிறார்.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால், உலகில் பல நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளது. இந்த நோய் காரணமாகப் பல தொழில்களும் பாதிப்படைந்துள்ள நிலையில் கடந்த சில காலமாக சினிமா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. கமல் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய சாதனை படைத்த படம் தான் இந்தியன். பல ஆண்டுகளாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எதிர்நோக்கிக் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தற்போது சுமார் 24 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார், சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பிற்காகப் படக்குழு சீனா செல்ல திட்டமிருந்தது. அங்குப் பரவி வரும் கொரோனா வைரசால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.