Asianet News TamilAsianet News Tamil

ராமநாதபுரமா தென் சென்னையா...உச்சக்கட்ட குழப்பத்தில் கமல்ஹாசன்...

தனது சொந்தத் தொகுதியான ராமநாதபுரத்தை விட தென்சென்னையில் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் தனது தொகுதியை முடிவு செய்வதில் கடும் குழப்பத்தில் உள்ளார் கமல் என மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

kamal in confusion
Author
Chennai, First Published Mar 23, 2019, 11:19 AM IST

தனது சொந்தத் தொகுதியான ராமநாதபுரத்தை விட தென்சென்னையில் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் தனது தொகுதியை முடிவு செய்வதில் கடும் குழப்பத்தில் உள்ளார் கமல் என மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.kamal in confusion

ஏற்கனவே 21 தொகுதிகளுக்கு மட்டுமே கமல் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நாளை மீதமுள்ள 19 தொகுதி வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார். அந்த வாக்குறுதிகளில் புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன. kamal in confusion

இதுபோக கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இன்னொரு பக்கம் தனது கட்சி நிர்வாகிகளில் சிலர் அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதை விட தென் சென்னையில் போட்டியிட்டால் அதிக வாக்குகள் பெற முடியும். தென்சென்னையில் நிறைய சினிமாக்காரர்கள் இருக்கிறார்கள் என்று கமலையே குழப்பி வருவதாகவும் இதனால் கடந்த 4 நான்கு நாட்களாகவே அலுவலகத்துக்கு வரும் அனைவரிடமும் கமல் எங்கு போட்டியிடலாம் என்று கருத்து கேட்டு வருவதாக மநீம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios