தற்போது இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போட்டியாக பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்திற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் இணைந்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். 

3 ஆயிரம் பேர் இருக்கும் சங்கத்தை விட்டு விட்டு வெறும் 40 பேரை நம்பி பாரதிராஜா சங்கம் ஆரம்பித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கே.ராஜன் தலைமையிலான குழு, பாரதிராஜா வந்தால் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், தாய் சங்கத்தை விட்டு பிரிந்து போக வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். 

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், பாரதிராஜாவிற்கு உலக நாயகன் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா, முடக்கத்தையுடைத்து முயற்சியெடுக்கையில் முன்னேரின் என கமல்ஹாசன்  வழிமொழிதல் அகமகிழ்வைத் தருகிறது. மூத்ததொரு கலைஞனின் "தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்" காலத்தின் தேவையென்ற புரிதல் போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக 'நம்' தொடக்கம்போராடி நிரூபிக்கும் நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.