Asianet News TamilAsianet News Tamil

கையில் வாளுடன் கமல் ஹாசன்... வேற லெவலில் மிரட்டும் ‘விக்ரம்’ பட நியூ போஸ்டர்...!

கமல் ஹாசனின் 62 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் விதமாக கையில் வாலுடன் இருக்கும் கெத்தான போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 

Kamal hassan vikram movie latest poster going viral
Author
Chennai, First Published Aug 11, 2021, 9:49 PM IST

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த 16ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங்கின் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில்  இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 

Kamal hassan vikram movie latest poster going viral

கமல்ஹாசன் அரசியல் பணிகளில் பிசியாக இருந்ததாலும், கொரோனா பேரிடர் காரணமாகவும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்கு முன்னதாக படம் தொடங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக கடந்த வாரம் ஜூலை 10ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. 

Kamal hassan vikram movie latest poster going viral

சமீபத்தில் இந்த படத்தில் மலையாள நடிகரும், கமல் ஹாசனின் நண்பருமான ஜெயராமின் மகன்  மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளது உறுதியானதுஇ. இதில் காளிதாஸ் ஜெயராம் கமல் ஹாசன் மகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஃபகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு தற்போது மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. கமல் ஹாசனின் 62 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் விதமாக கையில் வாலுடன் இருக்கும் கெத்தான போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios