* ராஜமவுலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படம் எப்போ முடிஞ்சு எப்போ ரிலீஸாக போகுதுன்னு தெரியலை. ஷூட்டிங் ஆரம்பிச்சு பல மாதங்கள் ஆன பிறகும் இப்பவும் புதிய நடிகர்கள் அதில் இணைஞ்சுட்டே இருக்கிறாங்க. சமீபத்தில் வில்லன் பாத்திரத்தில் இணைந்தார் பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன். இப்போது அவரது ஜோடியாக உள்ளே வந்திருக்கிறார் ஸ்ரேயா 

* நடிகர் சித்தார்த்துக்கு அதிர்ஷ்டம் கட்டிடத்தை பிய்ச்சுக்கிட்டு கொட்டுகிறது. யெஸ்! கமல்ஹாசனின் மோஸ்ட் வான்டட் படமான ‘இந்தியன் 2’வில் நடிக்கும் அவர், இப்போது ரஜினியின் புதிய படத்திலும் இணைந்திருக்கிறார். கமலுக்கு பேரன் கேரக்டர், ரஜினிக்கு மருமகன் கேரக்டரில் சித்தார்த் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கிறது இரண்டு யூனிட்டும். ரஜினியின் மகளாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் ஜோடியாக சித்தார்த் வருகிறார்! என்றே தகவல். 

* டைம் மெஷின்! கான்செப்டை வைத்து ஹிட்டடித்த இயக்குநர் ரவிக்குமாரின் இரண்டாவது படமும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் தான். இதில் ஹீரோவாக சிவகார்த்தியும், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்கும் கமிட் ஆனார்கள்.  ஒன்றரை வருடங்களுக்கு முன்பு துவங்கிய இந்தப் படம் நிதி பிரச்னையால் முடங்கியது. ஆனால் இப்போது மீண்டும் டேக் ஆப் ஆகியிருக்கிறது. இதற்கு ரஹ்மான் இசைப்பதுதான் ஹாட் ஹைலைட்!

* நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் ‘காக்கா முட்டை’ படத்தில், இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார். செம்ம அப்ளாஸ் அள்ளினார் பர்ஃபார்மென்ஸில். அதன் பின் அம்மா கேரக்டருக்குதான் செட் ஆவார்! என்றார்கள். ஆனால் ஐஸோ வெரைட்டியாக வெளுத்து வாங்குகிறார் ஹீரோயினாக. இப்போது விஜய் தேவரகொண்டாவோடும் ஜோடி போட்டு முடித்திருப்பதுதான் ஹிட்டே!

* தயாரிப்பாளர் ராஜன் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் முக்கிய தலைகளுக்கு எதிராக பெரும் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், இப்போது தல அஜித்தை புரட்டி எடுத்திருக்கிறார். புறநகர் எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘நடிகர் அஜித் ரொம்ப நல்ல மனிதர். சோழா பொன்னுரங்கம் எனும் தயாரிப்பாளர்தான அவரை சினிமாவில் அறிமுகம் செய்தார். அவர் இன்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு படம் கொடுத்து காப்பாற்றலாம் அஜித். ஆனால், பாவம் மதிய சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மறைந்த ஸ்ரீதேயின் கணவர் போனி கபூருக்கு தொடர்ந்து இரண்டு படங்கள் கொடுக்கிறார்.” என்று புரட்டியிருக்கிறார். ராஜனின் கெத்து தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில்  வைரலாகிறது.