Asianet News TamilAsianet News Tamil

ஸ்ருதி, அக்‌ஷரா, சுப்புலெட்சுமி... இந்த 3 பொண்ணுங்களும் எந்த அப்பா - அம்மா சொல்ற பேச்சை கேட்கணும்..? நம்மவருக்கு நறுக் கேள்வி..

அப்பா, அம்மா சொல்றவங்களுக்குதான் ஓட்டு போடுவோமுன்னு நீங்க சொல்றது புரியுது. ஆனால் எந்த அம்மா - அப்பா சொல்றதை கேட்கணும்னு நான் சொல்றேன் : கமல்ஹாசன். (அப்படியே ஸ்ருதி, அக்‌ஷரா அப்புறம் சுப்புலட்சுமி இந்த மூணு பொண்ணுங்களும் எந்த அப்பா - அம்மா சொல்றதை கேட்கணுமுன்னு சொல்லிடுங்களேன் மிஸ்டர்.நம்மவர். இதை நீங்க சொல்லித்தான் ஆகணும்னு சொல்ல வர்ல, ஆனா சொன்னா நல்லா இருக்குமுன்னுதான் சொல்றோம்.)

Kamal Haasan question
Author
Tamil Nadu, First Published Apr 13, 2019, 6:09 PM IST

* துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் அரசியல் சூழ்ச்சி ஏதுமில்லை. கிடைத்த தகவலின் படி நடைபெற்ற சோதனை அவ்வளவுதான். இதற்கு போய் சிலர் சூழ்ச்சி, கீழ்ச்சின்னு கூப்பாடு போடுறாங்க.: பிரேமலதா. (அன்னைக்கு உங்க மண்டபத்தை இடிச்சதுல கூடதான் அரசியல் இல்லை, ஹைவே சர்வே சொன்னதால இடிக்கப்பட்டுச்சு!ன்னு கருணாநிதி அவ்வளவு சொல்லியும் நீங்க கட்சி ஆரம்பிச்சீங்களே. அதைவிடவா இது பெருசு?)

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் தன்னையும் பெரிய தலைவர் என நினைத்துக் கொள்கிறார் இ.பி.எஸ். ஜெயலலிதாவை விட கூடுதல் ஆடம்பரத்தோடு இ.பி.எஸ். வாழ்ந்து வருகிறார்: மா.சுப்பிரமணியன். (ஆட்சி, அதிகாரத்தை இழந்து கிட்டத்தட்ட பத்து வருஷமாக போகுது. ஆனாலும் உங்க கட்சி நிர்வாகிங்க வளத்துக்கு ஒரு குறையுமில்லாம வாழ்க்கையின் வசதிகளை அப்டேட் பண்ணிட்டே இருக்கிறாங்க. ஆட்சி இல்லாதப்ப இவ்வளவு வசதி எங்கிருந்து வருது? ஆக எதிர்க்கட்சி நீங்களே இப்படி இருக்குறப்ப...ஆளுங்கட்சி அவுகள கேக்கவா வேணும்?)

* பி.ஜே.பி.யின் 2014 தேர்தல் அறிக்கை அப்படியே இப்போது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிதாய் ஒன்றுமில்லை. அப்படியானால், போன தேர்தலில் சொன்னதை செய்யலைன்னுதானே அர்த்தம்: முத்தரசன். (ப்பார்றா! என்னவெல்லாமோ கண்டுபிடிச்சு பேசுறீங்களே முத்து. நீங்க கூடத்தான் எதுவுமே புதுமையில்லாம வழக்கம் போல ரெண்டு முதுகுல ஒரு முதுகுல சவாரி பண்றீங்க. ஒண்ணு காங்கிரஸை எதுக்குறீங்க, இல்லே பி.ஜே.பி. ஆட்சிக்கு வர்ற மாதிரி ஒரு அரசியல் செய்யுற எண்ணமே உங்களுக்கு கூடத்தான் இல்லை.)

* நதிநீர் இணைப்பு சாத்தியம் இல்லாததுங்கிறது தெரிந்தும் கூட நடிகர் ரஜினி இப்படி பேசுறது, அவர் தெரிந்துதான் பேசுறாரா இல்லே வார்த்தை ஜாலமா பேசுறாரான்னு புரியலை: கே.எஸ்.அழகிரி. (என்னா தல இப்படி ஒரு பச்சப்புள்ளையா இருக்குறீக? அவர் பேசுறது வார்த்தை ஜாலமில்லை. வாழ்க்கை ஜாலம். இந்த ஜாலத்தை வெச்சுத்தானே அவர் தன்னோட சூப்பர்ஸ்டார் வாழ்க்கையை இவ்வளவு கெத்தா ஓட்டிட்டு இருக்காரு?)

* அப்பா, அம்மா சொல்றவங்களுக்குதான் ஓட்டு போடுவோமுன்னு நீங்க சொல்றது புரியுது. ஆனால் எந்த அம்மா - அப்பா சொல்றதை கேட்கணும்னு நான் சொல்றேன் : கமல்ஹாசன். (அப்படியே ஸ்ருதி, அக்‌ஷரா அப்புறம் சுப்புலட்சுமி இந்த மூணு பொண்ணுங்களும் எந்த அப்பா - அம்மா சொல்றதை கேட்கணுமுன்னு சொல்லிடுங்களேன் மிஸ்டர்.நம்மவர். இதை நீங்க சொல்லித்தான் ஆகணும்னு சொல்ல வர்ல, ஆனா சொன்னா நல்லா இருக்குமுன்னுதான் சொல்றோம்.)

Follow Us:
Download App:
  • android
  • ios