Kamal Haasan controversial speech at Big Boss
கடவுளிடம் நாம் பேசினால் பக்தி. கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் தொகுப்பாளராக பங்கெடுத்து வருகிறார். 15 திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பதே அது. நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கென சென்னை, புறநகர் அருகே உள்ள தீம் பார்க் ஒன்றில் ரூ. 100 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, பேனா, பென்சில், கடிகாரம், இணையதளம், பேப்பர் என்று எந்தவொரு தொலை தொடர்புக்கும் அனுமதி கிடையாது. வீட்டின் அனைத்து இடங்களிலும் கழிவறை-குளியலறை தவிர கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளனர்.
.jpg)
பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வீட்டில் உள்ள திரையுலக பிரபலங்களுக்கு போட்டிகள், விளையாட்டுகள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொருத்து மக்களின் ஓட்டுகள் அடிப்படையிலும் பரிசு வழங்கப்படும். நேற்று துவங்கிய நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கலந்து கொள்ளும் முன் ஆரவாரமாய் விளம்பரம் செய்யப்பட்டது.

15-வது நபராக நடிகை நமீதா கலந்து கொண்டார். அப்போது கமல், சமீபகாலமாக ஆன்மீகத்தில் நமீதா மிகவும் நாட்டம் கொண்டுள்ளது குறித்து கேட்டார். மேலும், கடவுளிடம் பேசுவீர்களா என கமல் கேட்டதற்கு, ஆமாம் என்று நமீதா பதிலளித்தார். இதற்கு கமல், கடவுளிடம் நாம் பேசினால் பக்தி. கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம் என சொல்லி சிரித்தார்.
.jpg)
கமலின் இந்த பதிலால் திக்குமுக்காடிப்போன நமீதா, ஒருவாறு சமாளித்தபடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கமலின் இந்த பேச்சு, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கமல், அண்மையில் மகாபாரதம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
