கமல்ஹாசனை ‘பி.ஜே.பி.யின் பி டீம். ஜெயலலிதா மறைவினால் அ.தி.மு.க.விலிருந்து பிரியும் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வினுள் சென்றுவிடாமல் தடுப்பதுதான் கமலுக்கான வேலை. அதனால்தான் நாத்திகம், திராவிடம் பேசி குழப்பி தி.மு.க.வின் புது வாக்கு வங்கியை சிதறடிக்க முயல்கிறார்.’ என்று ஒரு விமர்சனம் வலுவாக இருக்கிறது. 

அதேபோல் கமல்ஹாசனோடு சில நாட்கள் வாழ்ந்துவிட்டு பின் அவரைப் பிரிந்த கவுதமியையும் மோடியின் தூதுவர்! என்றே விமர்சிக்கின்றனர். அரசியல் பார்வையாளர்கள். கூடவே ‘கமலும், கவுதமியும் வேலைபார்ப்பது மோடிக்காகதான். ஆனால் தங்களுக்குள் பிரிவு இருப்பது போல் ஒரு சீனை போட்டுக் கொண்டு தங்கள் அஸைன்மெண்டை நடத்துகின்றனர்! இதில் கமல் கூட அரசியல்வாதி என்று நேரடியாக வந்துவிட்டார். ஆனால் கவுதமியோ தன்னை ‘சமூக சேவகர்’ என்று பில்ட் - அப் கொடுத்துவிட்டு, திரைமறைவில் பி.ஜே.பி.க்காக முழுமையாய் உழைக்கிறார். அவர் பி.ஜே.பி.யின் ஊழியர்.’ என்றும் போட்டுத் தாக்குகின்றனர் விமர்சகர்கள். 

மோடியின் தூதர்! என்று தன் மீதான விமர்சனத்தை மெய்ப்பிக்கும் விதமாகதான் கவுதமியும் பேசி வருகிறார். சமீபத்தில் ...”நான் சென்ன மாதிரியான நகரங்களையும், கிராமங்களையும் நிறைய சுற்றி வருகிறேன். மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஆசை இருக்கிறது. பல விஷயங்களை அநாயசமாக சாதித்திருக்கிறார் மோடி. இப்போது நம் நாடு நன்றாக முன்னேறியிருக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். போன் 5 வருஷங்களுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு, இப்ப எப்படி இருக்குதுன்னு நீங்க யோசிக்கணும்.” என்று வெளிப்படையாக மோடியை ஆதரித்துப் பேசியிருப்பவர்...

“ரஜினி ஆதரவு கொடுத்தால் 40 எம்.பி. தொகுதிகளிலும் நான் ஜெயிப்பேன் என்று கமல் சொல்லியிருப்பதை பற்றி கேட்கிறார்கள். அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் ஜெயிக்கும் வெறி இருக்கும். கமல் இப்படி சொல்லியிருப்பதன் மூலம், தன்னைவிட ரஜினிக்குதான் செல்வாக்கும், மாஸும் இருப்பதை கமலே ஒப்புக் கொண்டுவிட்டார். இது யதார்த்தமான பேச்சு. 

அதேவேளையில் ஒருவேளை ரஜினி அரசியலுக்குள் வந்துவிட்டால், கமலின் அரசியல்  வளர்ச்சி பாதிக்குமான்னு சொல்லிட முடியாது இப்போ.”என்று சொல்லியிருக்கிறார். இதைக்கூட விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்கள் “கமலை சீண்டுவது போல் பேசினாலும், அவரை ‘யதார்த்தவாதி’ என்று  சொல்கிறார் கவுதமி.  விட்டுக்கொடுக்காமல் வண்டியை ஓட்டுகிறார் பாருங்கள். கமல், கவுதமி இருவரும் இன்னமும் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள். இருவரும் பி.ஜே.பி.யின் வளர்ச்சிக்காக பிரிந்து நடிக்கிறார்கள்.” என்று பொளக்கின்றனர் விமர்சனத்தை.