ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்ச ரூபாய்யை எடுத்து கொண்டு வெளியேறினார். மிகப்பெரிய ஆதரவு அவருக்கு இருந்தும், ஏன் வெளியேறினார் என கவினின் ஆர்மியை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் மிகவும் ஆதங்கப்பட்டனர்.

அவர்களின் அனைவருடைய கேள்விக்கும் பதில் கொடுக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சியில் வந்து விளக்கம் கொடுத்தார். அதே போல் நேற்று லாஸ்லியாவிடம் அசடு வழிந்து கொண்டே கவின் பேசியது அனைவரையும் ரசிக்க வைத்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோவிலேயே, உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளார் கமல்.

இந்த புரோமோவில், கையில் ஒரு கார்டுடன் மேடைக்கு வரும் கமல்... அகம் டிவி வழியே அகத்துக்குள் என கூறுகிறார். அங்கு அனைத்து போட்டியாளர்களும் கமலை வணக்கம் கூறி வரவேற்கிறார்கள். பின் பேச துவங்கும் கமல், அதாவது ஒருவர் பணத்தை எடுத்து கொண்டு வெளியே சென்றதால், இந்த முறை ஏவிக்ஷன் இருக்காது என நீங்கள் நினைத்தால் அது தவறு.

கமல் சொல்வதை கேட்டதும் ஷெரின் இதை எக்ஸ்பெக்ட் செய்ததாக கூறுகிறார். இதற்கு கமல், அப்படியா என கேட்டு விட்டு உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கலாம் என்று இருக்கிறேன் என சொல்வது, இந்த புரோமோவில் வெளியாகியுள்ளது.