Vikram dialogue : கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு
Vikram dialogue : கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி தெரிவித்து மதுரை மண்டல மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளனர்.
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இதன் டிரைலரில் ஒரு ஆபாச வசனம் ஒன்று இடம்பெற்றிருக்கும், இதைப் பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனா இப்படி பேசி இருக்கிறார் என வாயடைத்து போயினர். இந்த காட்சி சமூக வலைதளங்களிலும் பேசுபொருள் ஆனது.
கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி தெரிவித்து மதுரை மண்டல மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டர் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் சில வேடிக்கை மனிதர்களை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ... என்று குறிப்பிட்டு டிரைலரில் கமல் பேசும் ஆபாச டயலாக்கையும் சேர்த்து பார்த்துக்கலாம் என்ற வசனத்துடன் கூடிய போஸ்டரை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மதுரை மண்டல மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளான கதிரேசன் மற்றும் வினோத் சேது ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஐபிஎல் போட்டி பார்க்க சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கூட இருக்குறது தனுஷா..! - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்