தனது தனித்துவமான நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ள, 60 ஆண்டுகால கலைச்சேவை புரிந்துள்ள கமலுக்கு வாழ்நாள் சாதனியாளர் விருது கொடுப்பதை விட்டு வெறுமனே மசாலாப் படங்களில் மட்டுமே நடித்த ரஜினிக்குக் கொடுத்ததென்பது பா.ஜ.க. அரசின் சுத்த பித்தலாட்டம் என்று கமல் ரசிகர்கள் வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் 7ம் தேதி கமல் தனது 65ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அவரது பிறந்தநாளையும் 60 ஆண்டு கால கலைச் சேவையையும் இணைந்து மூன்று நாட்கள் விழா எடுக்கவுள்ளர். இவ்விழாவில் கமலின் பாடல்களை மட்டும் இசைக்க இளையராஜா இசைக்குழு ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறது. இன்னொரு பக்கம் கமலின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஹே ராம்’ சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டு ஒரு விவாத நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இப்படி கமல் ரசிகர்கள் தங்கள் தலைவனுக்கு விழா எடுக்க உற்சாகமாக வேலை செய்துவரும் நிலையில் இன்று மத்திய அரசுக்கு ரஜினிக்கு அறிவித்துள்ள ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’,’ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ ஆகிய விருதுகளால் மனம் வெறுத்துப்போயுள்ளனர். கமல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் தன்னை ஒரு இயக்குநராகவும் உயர்த்திக்கொண்டு தரமான படங்களைத் தர அர்ப்பணித்துக்கொண்டுள்ளார். ஒரு தயாரிப்பாளராகவும் தொடர்ந்து ரிஸ்க் எடுக்கிறார். ஆனால் ரஜினி மசாலாப் படங்களில் நடிப்பதைத் தாண்டி சினிமாவுக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யாதவர். அப்படியிருக்க கமலுக்கு இன்னும் ஐந்தே தினங்களில் பிறந்த நாளும், அவரது 60 ஆண்டுகால கலைச் சேவை கொண்டாட்டங்களும் நடைபெற உள்ளநிலையில் ரஜினிக்கு இப்படி ஒரு விருதைக் கொடுத்து கமலை இன்சல்ட் பண்ணலாமா? என்று கொந்தளித்துக் குமுறுகிறார்கள் கமல் அபிமானிகள்.