அம்பானி கையில் சிக்கிய கமல் ..! அடுத்தடுத்து மரண அடி ..! அடங்கி போவாரா..? ஆள்வாரா ஆண்டவர்..? 

லைகா பட நிறுவனம் தயாரிப்பில் முதல்கட்ட படப்பிடிப்போடு நிறுத்தப்பட்ட இந்தியன்-2 மீண்டும் தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் இதனை கைப்பற்ற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் -2. லைகா நிறுவனம் தயாரித்து வந்த இந்தியன் - 2 பல்வேறு காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மிகவும் பிசியாக இயங்கி வரும் கமல், அரசியல் கட்சி ஒரு பக்கம்.. மற்றொரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் என தொடர்ந்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் தொடங்க உள்ளது. மறுபக்கம் சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதியே ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பிரச்சாரத்திற்கு நடுவே பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனுக்கு நாடு முழுவதிலுமிருந்து கடும் கண்டன குரல் எழுந்துள்ளது.இது கமலுக்கு மேலும் பல நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடருமா என்ற கேள்விக்கு... மீண்டும் தொடர கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டிருந்த இந்தியன்-2 மீண்டும் தொடர வேண்டும் என்றால், கடந்த 6 மாத காலமாக உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட செட்டுக்க்காக மட்டுமே 60 கோடி ரூபாய் தொகையை லைகா நிறுவனத்திற்கு வழங்கி விட்டு தான், படப்பிடிப்பை தொடர முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க ரிலையன்ஸ் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். இதற்காக இந்தியன்- 2 குறித்த முழு விவரம் அடங்கிய புத்தகம் ஒன்றை தயாரித்து ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்களாம் கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர். அதில் நடிகர் நடிகைகளின் தோற்றம், காட்சி, கதையம்சம் மேலும் பல சுவாரசிய தகவல் அடங்கி உள்ளதாம். இதையும் தாண்டி இதற்கான பட்ஜெட் குறித்த முழு விவரம் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

இவை அனைத்தும் ஒத்துவரும் பட்சத்தில் ரிலையன்ஸ் நிறுவனமே முன்வந்தது இயக்குனர் ஷங்கரிடம் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என நம்பகத்தகுந்த தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.