kamal controversial speech in big boss
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு நாளும் அங்கு என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இடையே உண்டு.
மேலும் இந்த வாரம் முழுக்க புதியவர்கள் வருகை மற்றும் அவர்களை பற்றிய சிறு பிரச்சனைகள் போய் கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி சற்று டல்லடித்து தான் போய் விட்டது.
ஆனால் இன்று நடிகர் கமலஹாசன் வருவதால் கண்டிப்பாக இத்தனை நாள் பார்க்க மறந்தவர்களும் இன்று நிகழ்ச்சியை பார்ப்பார்கள். இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் நடிகர் கமலஹாசன் அனைவரையும் குழப்பும் விதத்தில் குற்றங்கள் செய்வோர்... குற்றத்தை மறுப்போர்... கை கோர்த்துக்கொண்டால்... நம் கண்ணில் படாமல் போய் விடுமா என்ன? என்று கூறுகிறார்.
இந்த வார்த்தைகள் யாருக்காக கூறப்பட்டது... எதற்காக இப்படி பட்ட வசனம் என்பது இன்று இரவு தெரியவரும்.
