‘வெற்றி பெற்ற தேவர்மகன்தான் குணா.. தோல்வியடைந்த குணாதான் தேவர்மகன்’ என்று வழக்கம்போல பிக்பாஸ் பார்வையாளர்களை தனது கேள்வி பதி பகுதியில் குழப்பிக் கும்மியடித்தார் கமல்ஹாஸன்.அட்லீஸ்ட் இந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டுமாவது கமல் புரியும்படி பேசவேண்டும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வாசித்த கேள்விகளுக்கு கமல் பதில் சொன்னார். அவற்றில் ‘நாளை நமதே’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு சகோதரராக நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றியும் குறிப்பிட்டார். ‘எம்.ஜி.ஆர் கூட டான்ஸ் ஆடக்கிடைத்த வாய்ப்பு. பாருங்க.. அது நிஜமாகியிருந்தா.. இப்ப எவ்ள உதவியாக இருக்கும்?” என்று பொடி வைத்துப் பேசினார். இதற்கு எம்ஜிஆர் ரசிகர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

‘விஸ்வரூபம்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சர்ச்சையில் தமிழக மக்கள் எனக்கு தோள் கொடுத்தார்கள். அதற்கான நன்றிக் கடனைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்று உருகிய கமல்‘வெற்றி பெற்ற தேவர்மகன்தான் குணா.. தோல்வியடைந்த குணாதான் தேவர்மகன்’ என்று இன்னொரு கேள்விக்கு பதில் சொன்னார். அடுத்து குட்ம்ப செண்டிமெண்ட் கேள்விக்கு பதிலளித்த அவர்,‘ஸ்ருதிஹாசன் மட்டுமல்ல, தமிழகமே என் குடும்பம்தான்’என்று ஓட்டு வேட்டையில் இறங்கியதெல்லாம் பக்கா அரசியல்வாதியின் லட்சணம்.

சித்தப்பு சரவணனின் சோகக்கதையை தனியாகக் குறிப்பிட்டு ‘அவர்தான் உங்களின் தாய்.. உங்களின் குழந்தையும் கூட. என் வணக்கத்தைச் சொல்லுங்கள்’ என்று பிரத்யேமாகக் குறிப்பிட்டு பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றிருப்பதாக வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்று அவசர அவசரமாக சுயவிளம்பரம் செய்துகொண்டார்.என்ன நெருக்கடியோ பாவம்?