உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 19 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன் குடும்பத்துடன் தனிப்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கமலின் மகள் சுருதி ஹாசன்  லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார்.  For Corona, actor Kamal is isolated with his family. !!

இதையடுத்து கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி வீட்டில் சுருதி ஹாசன் மும்பையில் இருக்கும் தாயார் சரிகா வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கமலஹாசன் சென்னை இ.சி.ஆரில் இருக்கும் தனது வீட்டில் தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் கொரோனா எச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என சென்னை மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது.