kamal about rajuvgandhi rajinikanth and stalin
இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் தன்னுடைய தந்தை 'ராஜீவ் காந்தியின் கொலைக்குற்றவாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் மன்னித்துவிட்டதாக கூறினார். 
கமல் கருத்து:
இந்நிலையில் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் , ராஜீவ் காந்தி கொலையாளிகளை ராகுல் காந்தி மன்னித்து விட்டதாகக் கூறியது அவருடைய மனித நேயத்தைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக எம்.பி.கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்தை தாம் வரவேற்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார். 
அதே போல் தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ள வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று ரஜினிகாந்த் கூறியதை தான் தள்ளி நின்று மட்டுமே பார்ப்பதாகவும். அரசியலில் வெற்றி பெற சினிமா பிரபலம் என்கிற தகுதி மட்டும் போதாது என்பதை நான் அறிந்தவன் என்றும் கூறியுள்ளார் கமல்.
