சமீப காலமாக தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில், வாரிசு நடிகர், நடிகைகளின் வருகை அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால் அப்படி அறிமுகமாகும் அனைத்து நடிகர் நடிகைகளும் திரையுலகில் வெற்றி வாகை சூடுகிறார்களா? என்றால் சந்தேகம் தான்.

பல நடிகைகள் வந்த வேகத்தில் மூட்டையை கட்டுகிறார்கள். 

ஆனால் பல்வேறு சவால்களை கடந்து, இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவர் நடிக்க துவங்கிய போது, இவருடைய சிரிப்பு, முக பாவனை உள்ளிட்ட பல விஷயங்கள் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. இவரை வைத்து பல மீம்ஸ் வந்தன.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, இவர் தன்னுடைய நடிப்பு திறமையை 'மகாநதி' திரைப்படத்தில் காட்டி,  அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார். இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.  இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை கமிட் செய்ய  பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் இவருக்கு போட்டியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடிக்க உள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி.

இவர் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில், தன் வெற்றிக் கொடியை பறக்க விட்ட நிலையில், தற்போது கோலிவுட்டுக்கு அடி எடுத்து வைத்துள்ளார்.  தமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும், வான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர, தெலுங்கில் இரண்டு படத்திலும்  மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

திரையுலகத்தில் நடிக்க துவங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மூன்று மொழிகளும் ஒரு நடிகை, பிசியாக இருப்பதை பார்த்து பல நடிகைகள் வாயடைத்து போய் உள்ளார்களாம்.

இதனால் இந்த மூன்று மொழிகளிலும், தற்போது முன்னணி நடிகைகளுக்கு இணையாக இருக்கும் கீர்த்திக்கு, கல்யாணி, செம 
டஃப் கொடுப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்பதால், தமிழ் மொழியிலும் வெளுத்து காட்டுகிறாராம் கல்யாணி.