தமிழில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள 'ஹீரோ' படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ள பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி, தற்போது முன்னணி நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, வெற்றி படத்தை கொடுத்து விட்ட கல்யாணி, தற்போது தமிழிலும் அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ஹீரோ' , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'வான்' ஆகிய படங்களில் ஏற்கனவே 
 ஒப்பந்தமாகியுள்ளார். இப்போது 'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'வந்தா ராஜாவாகத்தான் வருவேன்' படத்தையடுத்து ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. அதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்றுள்ளார் சிம்பு. இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷி கண்ணா போன்ற நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில் இறுதியில் கல்யாணி ஒப்பந்தமாகியுள்ளார்.