வீட்டில் உள்ள பல குடும்பத்தலைவிகளுக்கு அரை மணி நேர தோழிகளாக வளம் வருபவர்கள் சின்னத்திரை நாயகிகள். அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த நாயகி பிரியா பவானிக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
ஒரே ஒரு சீரியல் நடித்திருந்தாலும் இவருக்கு பெண்கள் மற்றும் பல ஆண் ரசிகர்களும் உள்ளனர் , மேலும் சமீபத்தில் இவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து விலகியபோது பலரும் இதற்கு தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இவருடைய பேஸ்புக் பக்கத்தில் சீக்கிரம் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என தினேஷ் என்பவர் பிரியாவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனால் பிரியாவுக்கு உண்மையில் என்ன ஆனது என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் தற்போது பேஸ் புக்கில் பதிவு செய்த பதிவும் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
