Kalyalam muthal kathal varai actress kissed rajinikanth
பொதுவாகவே அனைத்து பிரபலங்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசை இருக்கும்.
இந்நிலையில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நாயகியாக நடித்த சைத்ரா... அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக காலா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றுள்ளார்.
ரஜினியும் அவருடைய ஆசையை நிறைவேற்றி சில நிமிடங்கள் சைத்ராவுடன் சிரித்துப் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது சைத்ரா ரஜினிகாந்தை கட்டிப் பிடித்தவாறு அவர் கன்னத்தில் முத்தமிடுவதுபோல் ஒரு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
தற்போது இந்தப் புகைப்படம் எப்படியோ லீக்காகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
