Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலக்கும் ‘கள்வா’!

மர்யம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது.
 

kalva short film got 3 awards
Author
First Published Jun 7, 2023, 10:26 PM IST

கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை ‘கள்வா’ படம் வென்றுள்ளது. இதேபோல் கொல்கத்தாவின் 6வது சர்வதேச பயாஸ்கோப் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரில்லர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய 3 விருதுகள் ‘கள்வா’வுக்கு கிடைத்திருக்கிறது.

பக்கிங்கம்ஷெர் நாட்டிலுள்ள ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிட ‘கள்வா’ தேர்வாகியுள்ளது. மும்பை சர்வதேச குறும்பட விழாவுக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச பட விழாவுக்கும் திரையிட தேர்வாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிஃப்ட் ஆஃப் பிலிம்மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியிருக்கிறது. இதேபோல் மான்செஸ்டரில் ஃபர்ஸ்ட் டைம் ஃபிலிம் மேக்கர் செஷனிலும் திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. மேலும் பல சர்வதேச பட விழாக்களுக்கும் ‘கள்வா’ அனுப்பப்பட்டுள்ளது.

'காதல் கொண்டேன்' பட ஆதி டாக்சி ட்ரைவரா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இப்படி ஆகிட்டாரே.. ஷாக்கிங் புகைப்படம்!

kalva short film got 3 awards

இந்த குறும்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ளார். ஜேட்ரிக்ஸ் இசையமைத்திருக்கிறார். ஷரண் தேவ்கர் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்சல் கதை எழுதியிருக்கிறார். பிரேம் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் இப்படம் யூடியூபில் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து இந்தகுறும்படத்திற்கு சர்வதேச அளவில், அங்கீகாரம் கிடைத்து வருவதால், இந்த குறும்படத்தின் இயக்குனர் ஜியா வெள்ளித்திரையில் தரமான படங்கள் மூலம் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாஷிகாவுடன் காதல்? கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்ததன் ரகசியம் பற்றி உண்மையை உடைத்த நடிகர் ரிச்சர்ட்!

குறும்பட இயக்குநர்களாகவும், நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று குறும்படம் இயக்கிய அனுபவத்தை வைத்து, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் போன்ற பலர் முன்னணி இயக்குனர்களாக தமிழ் சினிமாவில் தடம் பதித்து, வெற்றிகண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios