கல்கி 2898 AD திரைப்படம் உலகளவில், 8 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்கிற தகவலை, திரைப்பட வணிகவியாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். இந்த விவரம் பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. 

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சுமார் 600 கோடி பட்ஜெட்டில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD'. சலார் படத்தின் வெற்றிக்கு பின்னர், பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது. 

வெளியான முதல் நாள் முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களும், பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளும் குவிந்தன.குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நாக் அஸ்வின் 'கல்கி' படத்தின் மூலம் இந்திய திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.

கல்யாணம் முடிஞ்ச கையேடு... சட்டுபுட்டுன்னு ஹனி மூன் கிளம்பிய வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடி! வைரலாகும் போட்டோஸ்!

மேலும் இப்படம் வெளியான முதல் நாளே, இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில், முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. 4 நாட்களில் சுமார் 500 கோடியை கடந்த இப்படம், 8 நாட்களில் இதுவரை சுமார் 800 கோடியை உலக அளவில் கடந்து விட்டதாக தெரிவித்துள்ளார் ரமேஷ் பாலா.

தங்க ஜரி எம்ராய்டரி உடையில் ஆனந்த்.. கண்ணை பறிக்கும் அழகிய லெஹங்காவில் ராதிகா! சங்கீத் லுக் கியூட் போட்டோஸ்!

'கல்கி' படத்தில் பிரபாஸை தவிர அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ளனர். கூடிய விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…