Asianet News TamilAsianet News Tamil

Bhairava Anthem: 'கல்கி 2898 AD' படத்தில் இருந்து பைரவா ஆன்த்தம் பாடலின் ப்ரோமோ வெளியானது

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் 'கல்கி 2898 ஏ டி' படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இப்படத்தில் இருந்து பைரவா ஆன்த்தம் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.
 

Kalki 2898 AD movie Bhairava Anthem Released mma
Author
First Published Jun 15, 2024, 5:27 PM IST

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ டி' எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.  ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்துகொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். 

Kalki 2898 AD movie Bhairava Anthem Released mma

Maharaja Day 1 Collection: மகாராஜாவாக மகுடம் சூடினாரா விஜய் சேதுபதி? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!

இப்படத்தின் ட்ரைலரில் '' இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது... குடிநீர் பிரச்சனை.. உலகத்தின் ஒரே கடவுளாக சுப்ரீம் யஸ்கின்... 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி... அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்... இதை தடுக்க நினைக்கும் கும்பல் ... புஜ்ஜி என்ற வாகனத்துடன் அவர்களுடன் இணையும் பைரவா.. இருவருக்கும் இடையே நடைபெறும் போர்...‌ பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா... புதிய பிரபஞ்சம் உருவாகவிருக்கிறது என்ற முத்தாய்ப்பான வசனத்துடன் முன்னோட்டம் நிறைவடைகிறது. 

ரசிகர்களுக்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புஜ்ஜி எனும் வாகனம் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.  பிரபாஸின் ஸ்டைலான தோற்றமும் .. ஆக்சன் பாணியிலான வசனங்களும்.. இது பிரபாஸின் படம் என்பதை அவரின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில் தயாராகி இருக்கிறது. 

Kalki 2898 AD movie Bhairava Anthem Released mma

படத்தின் ட்ரைலர் திரைப்படமே மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் இருந்தது. ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணியில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பைரவா ஆன்த்தம்' பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரேம்ஜிக்கும் அவர் மாமியாருக்கும் ஒரே வயசு! 1000 சவரன் எல்லாம் உட்டாலக்கடியா? இந்துவின் பின்னணி இதுதான்!

சந்தோஷ் நாராயணன் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இப்பாடல்  இந்த வருடத்தின் மிகப்பெரிய பாடல் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு கூடியுள்ளது.  இந்த பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த பாடலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இதில் பிரபாஸ் தில்ஜித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios