- Home
- Gallery
- பிரேம்ஜிக்கும் அவர் மாமியாருக்கும் ஒரே வயசு! 1000 சவரன் எல்லாம் உட்டாலக்கடியா? இந்துவின் பின்னணி இதுதான்!
பிரேம்ஜிக்கும் அவர் மாமியாருக்கும் ஒரே வயசு! 1000 சவரன் எல்லாம் உட்டாலக்கடியா? இந்துவின் பின்னணி இதுதான்!
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டுள்ள பெண் குடும்பம் குறித்தும், அவரின் பேக்கிரவுண்ட் குறித்தும் பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

premgi
இசைஞானி இளையராஜாவின் உடன் பிறந்த தம்பி கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி, 45 வயதை எட்டிய பின்னர் ஒரு வழியாக கடந்த வாரம் திருமண பந்தத்தில் இணைந்தார்.
premgi
இவரது திருமணம், கடந்த வாரம் மிகவும் எளிமையாக.. திருத்தணி முருகன் கோவிலில் நடந்தது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கபட்டதால் குறைவான நபர்களே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
Premgi
அதே நேரம் கூடிய விரைவில் சென்னையில் மிக பிரமாண்டமாக திருமண ரிசப்ஷன் நடந்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதில் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
premgi
பிரேம்ஜி, திரையுலகின் வாசமே இல்லாத.. வங்கி ஊழியர் இந்து என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த பெண் யார் என பலர் தற்போது வரை தேடி கொண்டு தான் உள்ளனர். இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் அந்தணன்.
Premgi
இந்து பணக்கார வீட்டு பெண் எல்லாம் இல்லையாம். மிகவும் சாதாரண, நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தானாம். இவரின் தந்தை காய் கரி விற்பனை செய்யும் தொழில் தான் செய்து வருகிறாராம்.
சேலத்தை சேர்ந்த இந்துவுக்கு பிரேம்ஜி இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். அப்படியே மெல்ல மெல்ல வளர்ந்த இவர்களின் நட்பு காதலாக மாறியதாகவும், காதல் ஜாதி, மதம், நிறம், வயது என எதையும் அறியாதது என்பதை உண்மையாகும் விதத்தில், தன்னை விட 20 வயது மூத்தவரான பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்டுள்ளார் என பேசியுள்ளார்.
Mic Mohan: ரசிகையின் தாலியை பார்த்து மெய் சிலிர்த்து போன மோகன்! எந்த கணவர் இப்படி சொல்லுவார்?
Premgi And Indhu Wedding
இந்துவின் அம்மாவுக்கே பிரேம்ஜியின் வயசு தான் ஆகிறது என அந்தணன் கூறி உள்ள தகவல் தான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல் இந்து பணக்கார பெண், 1000 சவரன் இவருக்கு நகைகள் போடப்பட்டது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் வதந்தி என்பது அந்தணன் கூறிய தகவலில் இருந்து தெரிகிறது.