Kalki 2898 AD Movie : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படம் தான் கல்கி 2898 AD. பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகின்றது என்றால் அந்த திரைப்படம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றது. இப்பொழுது அதே பட்ஜெட், 500 கோடி அல்லது 1000 கோடி என்று மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. சிறு சிறு திரைப்படங்கள் வெற்றி பெறும் அதே நேரம், பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் உலக அளவில் சாதனைகள் படைத்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக சிரத்தை எடுத்து உருவாக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ள ஒரு திரைப்படம் தான் "கல்கி 2898 AD". இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரம் ஏற்ற நடிக்க, இந்திய திரை உலகின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 

Malavika Mohanan : கல்லூரி விழாவில் கருப்பு சேலையில்.. மனதை கொள்ளைகொண்ட மாளவிகா மோகனன் - வைரல் போட்டோஸ்!

அதேபோல பல ஆண்டுகள் கழித்து வில்லன் கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த திரைப்படத்தில் தோன்றும் நிலையில், தீபிகா படுகோனே மற்றும் திசா பட்டாணி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 2898ம் ஆண்டு நடைபெறும் ஒரு கதைகளம் கொண்ட முற்றிலும் மாறுபட்ட இந்த திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸிற்கு சுமார் 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதேபோல உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சில நிமிடங்களே தோன்றும் ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு சம்பளம் 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல அமிதாபச்சனுக்கும், நடிகை தீபிகாவிற்கும் 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நடிகை திஷா பட்டாணிக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே 250 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

250 கோடிக்கு 10 கோடி என்று வைத்தாலும் சிறிய பட்ஜெட் படங்கள் 25 எடுத்து விடலாமே என்று நெட்டிசங்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் கல்கி போன்ற தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் திரைப்படங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை தேவைப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 600 கோடி என்றும் கூறப்படுகிறது.

Samantha : திரையுலகில் புது அவதாரம் எடுக்கும் சமந்தா.. பிறந்தநாளில் வெளியான மிரட்டல் அப்டேட் - BANGARAM பராக்!