ராணா கிரியேசன்ஸ்  அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம் தயாரிக்கும் படம்  "களவாணி சிறுக்கி" இந்த படத்தில் சாமி, திவாகர், சங்கர்கணேஷ் ஆகிய மூன்று பேர்   கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சுகிரிட்டி அறிமுகமாகிறார். 

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் -  ரவிராகுல். இவர் 'ஆத்தா உன் கோவிலிலே', 'மிட்டா மிராசு', 'தமிழ்பொண்ணு', 'மாங்கல்யம் தந்துனானே' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் மூன்றாவதாக இயக்கம் இந்த திரைப்படம் குறித்து இவர் கூறுகையில்...

ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுற விதம் , நல்ல விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும், அல்லது தவறான விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும் . அது அவரவர்கள் புரிந்துக்கொள்கிற மனப்பக்குவத்தை பொருத்தது.

கிராமத்தில் இருக்கிற பெண் ஒருத்தி ஒரு வாலிபனிடம் எதார்த்தமாக பழகுகிறாள், ஆனால் அதில் ஒருத்தன் அதை தவறாக நினைத்து அவளிடம் தப்பாக நடக்க முயல்கிறான். இறுதியில் அவன் நினைத்தது நடந்ததா, இல்லை என்ன பிரச்சனைகளை அவன் சந்தித்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, பொள்ளாச்சி, ஈரோடு அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா முதல் முறையாக  ஈரோட்டில் உள்ள சீனிவாசா திரையரங்கில் நடைபெற்றது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இசையை வெளியிட்டார் என தெரிவித்துள்ளார்.