இந்த வருடம் பொங்கலை, மேலும் சிறப்பாக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 'பேட்ட' திரைப்படம் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியிலும், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உலகம் முழுவதில், நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தை பார்க்க, படத்தின் தயாரிப்பாளர் 'கலாநிதி மாறன்' நேற்று சென்னை கோயம்பேடு அருகில் உள்ள ரோஹினி திரையரங்க வளாகத்தில் 'பேட்ட' படம் பார்த்தார். 

கலாநிதி மாறனுக்கு, திரையரங்க நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். அது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஒரே தினத்தில், இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வசூல் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களுக்குமே வசூல் நல்ல விதமாக இருந்ததாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். 

 மேலும் பொங்கல் விடுமுறை வருவதால், வசூல் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.