kala relese in tamilnadu morning show
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் காலா படம் ரிலீஸ் ஆனது. இந்த சிறப்பு காட்சிகளை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.
காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏராளமான திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர்.
இதே போல் மதுரையில் இன்று அதிகாலை மூன்று மணியில் இருந்தே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். மதுயைப் பொறுத்தவரை 11 தியேட்டர்களில் காலா திரையிடப்பட்டுள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. சென்னை நகர் உள்பட உலகம் முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கும் பின்னர் வெளியிடப்படுவதால் காலா அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
