kala moive release date

கபாலி

வட சென்னை மக்களின் வாழ்க்கையை அழகாக எடுத்து சொல்பவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவருக்கு தமது படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார் ரஜினிகாந்த். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான படம் தான் 'கபாலி'.மலேசிய தமிழர்களின் தலைவனாக, மலேசிய தமிழர்களின் உரிமையை மீட்டு அதே சமயம் தனது குடும்பத்தை தேடும் ஒரு காதல் கணவனாக பாசமான அப்பாவாக நடித்திருப்பார் ரஜினிகாந்த். 

காலா

இந்நிலையில் கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் பா.ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கியுள்ளார் .படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படம் எப்போது வரும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது.

ஏப்ரல் 27

சில நாட்களுக்கு முன்பு தமிழ் புத்தாண்டு தினத்துக்கு காலா வெளியாவதாக செய்திகள் வெளியாயின.இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 27 ம் தேதி படம் ரிலீசாகும் என படடகத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மும்பை தமிழர்கள்

மும்பையில் வாழ்ந்து தமிழர்கள் பலருக்கும் உதவி செய்த ஒரு தமிழனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தற்போது காலா ஏப்ரல் 27 ம் தேதி ரிலீசான போகிறது என்பது பலருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

கிராஃபிக்ஸ்

அதே சமயம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.ஓ படத்தின் ரிலீஸ் தேதி கிராஃபிக்ஸ் வேலைகளால் தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.