தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் சினிமா துறையில் தனி ஒரு பெண்ணாக நின்று, நடன மாஸ்டராக சாதித்து காட்டியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிகம் விருப்பப்படும் நடன இயக்குநரும் இவரே. 

திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுக்கியிருந்த கலா மாஸ்டர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட, மயிலாட நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமானார். 

இதையும் படிங்க: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்... திரும்ப சின்னத்திரைக்கே போயிடுறேன்... புலம்பும் பிரபல நடிகை...!

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பிரபல ரோடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கலா “மாஸ்டர்” விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் வெளியானது. உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங், சில நொடிகளில் யூ-டியூப்பில் பல்லாயிரக்கணக்கான வியூஸ் என சோசியல் மீடியாவையே அந்த பாடல் அலறவிட்டது. 

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

அப்படிப்பட்ட விஜய்யின் மாஸ் சாங்கான “வாத்தி கம்மிங்” ஒத்து பாடலுக்கு கலா மாஸ்டர் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். 48 வயதாகும் கலா மாஸ்டர் ஆடும் ஆட்டத்தை பார்த்தால் இளம் நடிகைகளுக்கே ஹார்ட் அட்டாக் வந்துவிடும். அப்படி ஒரு மாஸ் டான்ஸ் போட்டு, சோசியல் மீடியாவை கலக்கியிருக்கிறார் பாருங்க...