Kala film was live relay by a fan in facebook in america
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நாளை ரிலீஸ் ஆகும் காலா திரைப்படம் இன்று அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் சற்று முன் திரையிடப்பட்டது. இந்த படத்தை அமெரிக்காவில் ஒருவர் தியேட்டரில் இருந்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உட்பட உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் காலா படம் ஒருநாள் முன்னதாகவே சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள திரையரங்கு ஒன்றில் காலா திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ரசிகர் ஒருவர் படத்தை பேஸ்புக்கில் நேரடியாக சுமார் 40 நிமிடம் ஒளிபரப்பு செய்தார்.
இதைப்பார்த்த திரையரங்கு ஊழியர் ஒருவர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார், இதையடுத்து போலீசார் அந்த நபர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
