Kala film release date announced
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வரும் ஜுன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
'கபாலி திரைப்படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'காலா' படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் தடை ஏற்பட்டது. கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து நேற்று திரைப்படத் தயாரிப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று முதல் மீண்டும் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் மாந்ச் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டம் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது "காலா" திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து உள்ளார்.
