kakkaka muttai vignesh acting hero cast

காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்தவர் விக்னேஷ், முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியவிருதையும் பெற்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த அப்பா படமும் மிக பெரிய வெற்றி பெற்றது, இந்நிலையில், இவர் அறிமுக இயக்குனர் "சேர கலையரசன்" இயக்க உள்ள குழலி என்கிற திரைப்படத்தில் ப கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இவருக்கு ஹீரோயின்னாக, பாபாநாசம் படத்தில் கமலுடைய இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் நடிக்கவுள்ளார். இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, படிக்கும் மாணவர்களிடையே எது காதல்? எது இனக்கவர்ச்சி என்பதை தெளிவுபடுத்தும் விதமாக "குழலி" திரைப்படம் இருக்கும் என தெரிவித்தார்.