kajol daugther photo shared

பாலிவுட் திரையுலகம் மட்டும் இன்றி, தமிழிலும் 'மின்சாரச கனவு', 'வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை கஜோல். இவர் பிரபல நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இப்போது அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இதுவரை தன்னுடைய குழந்தைகளை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருந்த கஜோல் தற்போது முதல் முறையாக சிங்கப்பூரில் படித்து வரும் தன்னுடைய 15 வயது மகள் நைசாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 Madame Tussauds அருங்காட்சியகத்தில் மெழுகு சிலையை திறந்து வைக்க வந்த கஜோல் அங்கு மகளுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். "முதன்முறையாக மகளுடன் ரெட் கார்ப்பெட்டில் நடக்கபோகிறேன்" என்றும் குறிபிட்டுள்ளார். 

Scroll to load tweet…