kajalagarwal help the amalapaul movie

நடிகை அமலா பால் விவாகரத்திற்கு பின் மிகவும் கவனமாக திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த 'திருட்டுப்பயலே 2' திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. 

விரைவில் இவர் நடிப்பில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு "அதோ அந்த பறவை போல" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார்.

மேலும் காஜல் அகர்வால், தன் ட்விட்டர் பக்கத்தில் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று கூறி தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Scroll to load tweet…