இரண்டு பேர் மீது எனக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது!

என்னை காதலிப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். நானும் இரண்டு  பேரை காதலித்தேன் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியொன்றில்; “நான் எங்கு போனாலும் எப்போது கல்யாணம், யாரை காதலிக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். என்னை காதலிப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள்.

நானும் காதலை உணர்ந்து இருக்கிறேன். இரண்டு பேர் மீது அது ஏற்பட்டு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒருவர் மீதும், நடிகையான பிறகு ஒருவர் மீதும் அந்த உணர்வு ஏற்பட்டது. நடிக்க வருவதற்கு முன்னால் காதலிப்பது என்பது எளிது. ஆனால் சினிமாவுக்கு வந்து பெயர், புகழ் கிடைத்த பிறகு காதலிப்பது கஷ்டம்.

அதற்கு நேரம் கிடைக்காது. காதலித்தால் அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். காதலர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். சந்திக்க கூட நேரம் ஒதுக்க முடியாவிட்டால் காதலித்து என்ன பிரயோஜனம்.

எனக்கு காதலிக்க நேரம் இல்லை. திருமணத்துக்கும் தயாராகவில்லை. இத்தனை காலம் நடிகையாக இருக்கும் எனது பயணத்தில் நிறைய நடிகர்கள் வந்துபோய் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு எல்லைக்குள்தான் எனது பழக்கம் இருந்தது. அந்த எல்லையை தாண்டியது இல்லை. ஒரு சிலரை தவிர மற்ற நடிகர்களுடன் நட்பாகவும் பழகியது இல்லை என கூறியுள்ளார்.

தலயோடு மல்லுக்கட்ட வருகிறாரா ஆக்ஷன் கிங்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா ஆகியோரும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு அர்ஜுனிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அஜித் மற்றும் அர்ஜுன் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அர்ஜுன் அஜித்துக்கு வில்லனாக நடிக்கக்கூடும் என தெரிகிறது. அர்ஜுன் இன்னும் எதுவும் சொல்லாத நிலையில், ஏற்கனவே, இருவரும் ஒன்றாக நடித்ததால் இந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார் என படக்குழுவினர் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்த வராததற்கு இதுதான் – காரணமா?

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவி இரு வாரங்களுக்கு முன்பு துபாயில் மரணமடைந்தார். சமீபத்தில் இவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.  இந்த அஞ்சலி  திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்தினர். அஜித் மற்றும் ஷாலினி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட்டத்திற்கு முன்பே போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர்.

மேலும் இந்த கூட்டத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளாததால் இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

வரும் மார்ச் 16-ம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருப்பதால் அதற்குள் தளபதி-62 படத்தின் படப்பிடிப்புகளை முடிந்த அளவிற்கு முடித்து விட வேண்டுமென மும்மராக படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இந்த நேரத்தில் ஸ்ரீ தேவியின் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டால் படக்குழுவினருக்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் விஜய் கலந்து கொள்ளவில்லையாம்.