தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை, விஜய், அஜீத், சூர்யா, என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நடிப்பை தாண்டி, விளம்பரப்படங்கள், மாடலின், கடை திறப்பு விழா, பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் கலந்துகொண்டு சம்பாதித்து வருகிறார். மேலும் கண்ணுக்கு தெரியாமல் சிலருக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மற்ற நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு ஒரு வேலை செய்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது பப், விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிக்காக நடத்தப்படும் சூதாட்டத்தில் கலந்துகொண்டு, அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஜாலியாக பேசி அவர்களுடன், சூதாட்டம் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

சமீபத்தில் இலங்கையில் பிரபலமான கசினோ சூதாட்ட கிளப் ஒன்றில், நடிகை காஜல் அகர்வால், சிறப்பு விருந்தினர் போல் கலந்துகொண்டு, அங்கு வரும் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுடன் சூதாட்டம் ஆடியது மட்டும் இன்றி அவர்களுடைய ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார். இதற்காக இவருக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.