தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற குயின் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் இப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அண்மையில் காஜல், நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த, 'கோமாளி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன்-2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால், வருமானம் இன்றி... தவித்த கேப் டிரைவர் ஒருவரை பற்றி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  "இதுகுறித்த அவர் கூறியுள்ளதாவது, 'கடந்த 48 மணி நேரத்தில் நான் தான் அவரின் முதல் கஸ்டமர் என்று,  ஒரு கேப் ட்ரைவர் என்னிடம் அழுதபடி கூறினார். இன்றாவது மளிகை சாமான்கள் வாங்கிவிடலாம் என என் மனைவி எதிர்ப்பார்த்து காத்திருப்பாள். இந்த கொரோனா வைரஸ் நம்மை பல வகையில் தாக்கியுள்ளது. ஆனால் தின வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதனால் நான் அவருக்கு கூடுதலாக 500 ரூபாய் கொடுத்தேன். இதுபோல் நாம் அனைவரும் செய்ய வேண்டும். தனது கடைசி கஸ்டமருக்கு பிறகு அவர்70 மணி நேரம் யாரும் கிடைக்காமல் கார் ஓட்டியுள்ளார். அதனால் உங்கள் கேப் ட்ரைவர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே பணம் செலுத்துங்கள். நீங்களே அவர்களின் கடைசி கஸ்டமராக கூட இருக்கலாம்' என்ற காஜல்  மன வலியை இந்த கருத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.