இயக்குநர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அடையாளம் காணப்பட்டவர் காஜல் அகர்வால். ஆனால் இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இந்தி, தெலுங்கு படங்கள் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தன. 

தற்போது, மும்மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.


இந்த ஆண்டு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்து வெளிவந்த கோமாளி படம், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது.

 தொடர்ந்து, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் பாரீஸ் பாரீஸ் திரைப்படம், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ளதால் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


தற்போது, உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்துவரும் காஜல் அகர்வாலுக்கு, வயது 34 ஆகிறது. 

இதனால், அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீவிரமாகவுள்ளனர். 


இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடற்கறையில் நின்றபடி கைவிரல்களை இதய வடிவத்தில் வைத்தவாறு போஸ் கொடுக்கும் புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.


காதல் வந்து திருமண ஆசையும் வந்ததால் என்னவோ! வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே அதிகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்த அவர், கடந்த சில நாட்களாக ஹோம்லி லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி வருகிறார். 


அந்த வகையில் தற்போது, புதிய புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால். பட்டுப்புடவையில் கண்களில் காதலுடனும், முகத்தில் நாணத்துடனும் அழகு காட்டியிருக்கும் அவரது இந்த க்யூட் புகைப்படங்கள், ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

காஜல் அகர்வாலின் ஹோம்லி லுக் புகைப்படங்களைப்பார்த்த ரசிகர்கள், நீ இனிப்பான புளிப்பான காஜல் அல்வா என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.